செம... வெறும் 30 நிமிஷத்தில டெல்லியிலிருந்து அமெரிக்கா போகலாம்... எலான் மஸ்க் சூப்பர் திட்டம்!
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம் மெகாதிட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி உலகின் நீண்ட தூர பயணங்களை ஒரு மணி நேரத்திற்குள் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் தூரம் வெறும் 30 நிமிடங்களாக குறையும் என கூறப்படுகிறது.
Under Trump's FAA, @SpaceX could even get Starship Earth to Earth approved in a few years — Taking people from any city to any other city on Earth in under one hour. pic.twitter.com/vgYAzg8oaB
— ALEX (@ajtourville) November 6, 2024
இது குறித்து ஒருவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் எலான் மஸ்க்கிடம், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சியின் கீழ், ஸ்டார்ஷிப் மூலம் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்குள்ளாக பயணம் மேற்கொள்ள முடியுமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மஸ்க், ‘இது சாத்தியம் தான்’ என பதிலளித்துள்ளார்.
இது குறித்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்ஷிப் மூலம் விண்கலத்தில் ஒரே நேரத்தில் 1000 பயணிகளை ஏற்றிக்கொண்டு, விண்ணில் பாய்ந்து, எங்கு செல்ல வேண்டுமோ அங்கு புவி வட்ட பாதையில் பயணித்து ஒரு மணிநேரத்திற்குள்ளாக குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் திட்டத்தை முயற்சித்து வருகிறது.
இதுகுறித்து, டெய்லி மெயில் , ” லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டொராண்டோ இடையே 24 நிமிடங்களில் பயணம் செய்யலாம் என்றும், லண்டன் முதல் நியூயார்க் இடையேயான தூரத்தை 29 நிமிடங்களில் கடக்கலாம் என்றும், டெல்லி முதல் சான் பிரான்சிஸ்கோ இடையே நீண்ட பயணத்தை 30 நிமிடங்களில் கடக்கலாம் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்ட 395 அடி விண்கலமான ஸ்டார்ஷிப்பில் 1,000 பயணிகள் வரை பயணிக்கலாம். இதனை கடந்த 10 வருடங்களாக ஸ்பேஸ்X தெரிவித்து வருகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!