“ஆடிட்டர் செய்த தவறுக்காக விஜய் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா?” - உயர்நீதிமன்றம் கேள்வி!

 
உயர்நீதிமன்றம் அரசு தமிழக விஜய்

பண்ருட்டியில் உள்ள சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி முதலமைச்சர் விஜய் மீது தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விஜய் தரப்புக்குச் சாதகமான பல முக்கியக் கருத்துகளை எழுப்பியுள்ளது.

பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை வேட்புமனுவில் மறைத்ததாகக் கூறி, வாக்காளர் தினேஷ் என்பவர் முதல்வர் விஜயின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விஜய் வேட்புமனு

ஏற்கனவே ரூ. 600 கோடிக்கும் அதிகமான சொத்துக் கணக்கைக் காட்டியுள்ள நிலையில், ரூ. 30 கோடி மதிப்பிலான சொத்தை மட்டும் மறைக்க வேண்டிய அவசியம் என்ன? அது எப்படி அவருடைய தேர்தல் வெற்றியைப் பாதிக்கும்?" என நீதிபதி கேள்வி எழுப்பினார். கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள் தங்களுக்கு எங்கெங்கு சொத்துக்கள் உள்ளன என்பதை முழுமையாக அறிவது சிரமம் என்பதைக் குறிப்பிட்டார்.

விஜய் வேட்புமனு

"முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் விஜய், தனது சொத்துப் பட்டியலைத் தயாரிப்பதில் தன் ஆடிட்டரைத்தான் முழுமையாக நம்பியிருப்பார். அவர் கொடுத்த பட்டியல்தான் வேட்புமனுவில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும். ஆடிட்டர் செய்த சிறிய தவறுக்காக ஒருவரின் தேர்தல் வெற்றியை எப்படிச் செல்லாது என அறிவிக்க முடியும்?" என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. இவ்வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணை நாளை  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.