மரகதம் குமரவேலை வைத்துக்கொண்டு ஊழல் பற்றி பேசலாமா? - திமுக வேட்பாளர் பரந்தாமன் கேள்வி!
தமிழக முதல்வர் விஜய் ஊழல் குறித்துப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று திமுக வேட்பாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தவெக அரசு தனது திறமையின்மையை மறைக்கவே திமுக மீது வீண் பழிகளைச் சுமத்தி வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊழல் குறித்துப் பேசும் முதல்வர் விஜய், மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு இது பற்றிப் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய விலைவாசி உயர்வு பற்றி முதல்வர் விஜய்க்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பிய அவர், பழைய திரைப்படங்களின் 'ரீமேக்' படம் போல அவர் முன்பு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று சாடியுள்ளார்.

விபி ஜி ராம் ஜி திட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்தியவர் யார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவெக அரசு தனது திறனற்ற நிர்வாகத்தை மறைப்பதற்காகவே தொடர்ந்து திமுக மீது பழிசுமத்தும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
