வால்மார்ட் வாகன நிறுத்துமிடத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொலை!

 
வால்மார்ட்

 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் செயல்பட்டு வரும் வால்மார்ட் கடையின் வாகன நிறுத்துமிடத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15-ஆம் தேதி இரவு இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

Indian-origin couple Gaganpreet (Garry) Rehal (23) and his girlfriend Sukhjeet Kaur (24) were shot dead outside a Walmart in Surrey, Canada, on November 15. Both Delta residents died in hospital.

வாகன நிறுத்துமிடத்தில் ஆண் மற்றும் பெண் இருவர் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து சென்று மீட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விசாரணையில் உயிரிழந்தவர்கள் சர்ரே அருகிலுள்ள டெல்டா பகுதியைச் சேர்ந்த ககன்பிரீத் ரெஹால் (23) மற்றும் சுக்ஜீத் கவுர் (24) என்பது தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், கிரிமினல் கும்பல்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Times Now | Two Indian-origin individuals, identified as Gaganpreet (Garry) Rehal, 23, and Sukhjeet Kaur, 24, have died following a shooting outside a...

துப்பாக்கிச்சூடு நடந்த சிறிது நேரத்தில் அருகிலுள்ள பகுதியில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்த நிலையில், குற்றவாளிகள் தப்பிக்க அந்தக் காரைப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு தீவிரமாக விசாரித்து வருகிறது. உலக முக்கியச் செய்திகளைத் தினமாலை.காம் தளத்தில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.