கரூரில் அரசுப் பணி ஆணை ரத்து.. இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

 
நிர்மல்குமார்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணைகளை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

கரூர்

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் கருணை அடிப்படையில் அரசுப் பணி ஆணை வழங்கி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்த அரசுப் பணி ஆணைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வழங்கப்பட்ட பணி ஆணைகளை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நியாயமான வாதங்களைக் கேட்காமலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

கரூர் விஜய்

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் நாளையே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.