சிகிச்சைக்காக சென்னை வந்த கேன்சர் நோயாளி.. விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!

 
கொலை

புற்றுநோய் நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக சென்னை வந்த நிலையில், விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ் குமார் சிங்கி (63). தொழிலதிபரான இவர், மொத்த சிமென்ட் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சென்னை ஏர்போர்ட்

கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் அவர் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்த பிரகாஷ்குமார் சிங், தனது மகன் உத்தம் சிங்கியுடன் (28) நேற்று சனிக்கிழமை (நவ.23) அகமதாபாத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார்.

விமான நிலையத்திற்கு வந்ததும், பிரகாஷ் குமார் சிங்கியை அவரது மகன் வெளியே தள்ளி, அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்தார். இந்நிலையில் பிரகாஷ்குமார் சிங்கி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

இது குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த சென்னை விமான நிலைய போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னைக்கு சிகிச்சைக்காக வந்தவர் விமான நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web