கோவையில் பரபரப்பு.... சவப்பெட்டியுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்!

 
நூர் முகம்மது

 

இன்று காலை முதல் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக, நூர் முகமது என்பவர் சவப்பெட்டியுடன்  வேட்பு மனு தாக்கல் செய்ய கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நூர் முகம்மது
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமாரிடம், இது வரை 42 முறை பல தேர்தல்களில் சுயோட்சையாக போட்டியிட்டு பரபரப்பைக் கிளப்பிய  நூர் முகமது என்பவர் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று சவப்பெட்டியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கோவை ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். 
‘நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டது’ என்பதைக் குறிப்பிடும் வகையில் சவப்பெட்டியுடன் மனு தாக்கல் செய்ய வந்திருப்பதாக கூறிய நூர் முகமதுவை சவப்பெட்டியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க போலீசார் மறுத்தனர். 

நூர் முகம்மது
ஆட்சியர் அலுவலகத்திற்கு 200 மீட்டருக்கு முன்பாகவே அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சவப்பெட்டியுடன் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். தொடர்ந்து காரில் இருந்து சவப்பெட்டியை இறக்குவதற்கு முன்பே, அதனை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து நூர் முகமதுவை மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வருமாறு போலீசார் அறிவுறுத்தினர். இந்த சம்பவத்தால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web