அதிர்ச்சி!! இ சேவை மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெற முடியாது!!

 
தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ.   செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான காலகட்டத்தை ஓராண்டுக்கு தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வந்தது.  ஆனால் தற்போது 4 மாதங்களுக்கு ஒரு முறை அதாவது ஒவ்வொரு காலாண்டிலும்  வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

ஆதார் வாக்காளர் அட்டை

ஆண்டில் 4 காலாண்டிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்  செய்துகொள்ளலாம். அதனால், புதிய வாக்காளர்கள் அனைவருக்கும், தேர்தல் ஆணையம் நியமித்துள்ள நிறுவனம் சார்பில், வாக்காளர் அட்டை அச்சிடப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தப்பட்டவர்களுக்கு  வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வாக்குச்சாவடி அலுவலர்கள் வழியாக விநியோகிப்பதில் பல புகார்கள் சமீபகாலமாக எழுந்து வருகின்றன.   புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  

இலவச மாற்று வாக்காளர் அடையாள அட்டை! தேர்தல் ஆணையம் !

புதிய அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்கப்பட்டு வருவதால் இசேவை மையங்கள் மூலம் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில்  போலி அட்டைகளை தடுக்கும் வகையில், இந்த புதிய அட்டைகளின் உட்புறத்தில் ஹோலோகிராம், கோஸ்ட் இமேஜ் என்ற நவீன வசதி, க்யூஆர் கோடும் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டைகளை இ-சேவை மையங்களால் அச்சிட்டு வழங்க இயலாது என்பதால், தேர்தல் ஆணையமே நேரடியாக வழங்கும்.   புதிய வாக்காளர்கள், முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை திருத்தம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டுமல்ல   அட்டையை தொலைத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். 

From around the web