"மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்பட முடியாது" - அமைச்சர் திடீர் ராஜினாமா!

 
கர்நாடக  அமைச்சர் ராமலிங்க ரெட்டி  ராஜினாமா கர்நாடக  அமைச்சர் ராமலிங்க ரெட்டி  ராஜினாமா

காவிரி அணை விவகாரத்தில் தமிழக - கர்நாடக இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், "எனது மனசாட்சிக்கு எதிராக என்னால் இனி செயல்பட முடியாது" என்று கூறி கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது பெங்களூரு காங்கிரஸ் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது, எனக்கு மிக முக்கியத்துவமான பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்படும் என கட்சித் தலைமை எனக்கு இரண்டு முறை அதிகாரப்பூர்வமாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அடுத்தடுத்து நடந்த அமைச்சரவை மாற்றங்களின் போதும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், அத்துறை வேறொரு அமைச்சருக்கு (டி.கே.சிவக்குமார் தரப்புக்கு) ஒதுக்கப்பட்டது எனக்குப் பெரும் வருத்தத்தை அளித்தது."

டி.கே.சிவக்குமார்

"என்னுடைய ஆதரவாளர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் நான் கொடுத்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. பதவிக்காக எனது கொள்கைகளையும், மனசாட்சியையும் அடகு வைத்துக் கொண்டு என்னால் இந்தத் துறையில் நீடிக்க முடியாது என்பதால் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், கட்சியை விட்டு விலகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். "காங்கிரஸ் கட்சியின் தேசிய மேலிடம் மீதோ அல்லது மாநிலத் தலைமை மீதோ எனக்கு எவ்வித தனிப்பட்ட கோபமும், எதிர்ப்பும் கிடையாது. நான் எப்போதும் போல காங்கிரஸ் கட்சியிலேயே சாதாரண சட்டமன்ற உறுப்பினராக நீடித்து, எனது தொகுதி மக்களின் பணிகளைத் தொடர்ந்து செய்வேன்" என்று ராமலிங்க ரெட்டி கூட்டாகத் தெரிவித்துள்ளார்.