பாலத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!

 
 விபத்து

திருநெல்வேலி  மாவட்டம், திசையன்விளை மன்னார்புரத்தில் வசித்து வருபவர்  ரிச்சர்ட்ராஜா. இவருக்கு வயது  49. இவர் கோவையில் சொந்த தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி மெர்லின் . இவருடைய மகள்  ரோஷினி .  மகன் ரோகித் . இவர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து காரில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
கோவை திரும்புவதற்கு நேற்று முன்தினம் இரவில் ரிச்சர்ட் ராஜா குடும்பத்தினரும், அவருடைய சகோதரர் ஜான்சன் ராஜாவும்  காரில்   புறப்பட்டனர். நள்ளிரவில்   நள்ளிசத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது   திடீரென கட்டுப்பாட்டை இழந்து  பாலத்தில் பயங்கரமாக மோதியது.

விபத்து

இதனால்  கார் அப்பளம் போல நொறுங்கியது. அத்துடன் கார் உருண்டோடி  சாலையோரம் கவிழ்ந்தது. இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் காருக்குள் சிக்கிக் கொண்டிருந்தவர்களை  மீட்டனர். அத்துடன் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.  காரில் இருந்த சிறுவன் ரோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட  மெர்லின், ரோஷினி, ரிச்சர்ட்ராஜா, ஜான்சன்ராஜா ஆகியோர்   கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.  மருத்துவமனையில்  மெர்லின் பரிதாபமாக இறந்தார்.  

ஆம்புலன்ஸ்

மற்ற மூன்று பேரும்  மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.   அங்கு சிறுமி ரோஷினி உயிரிழந்தார். ரிச்சர்ட்ராஜா, ஜான்சன்ராஜா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள்    பிரேத  பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள்  3 பேரும்  பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!