பொள்ளாச்சி அருகே கார் விபத்து... 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி!

 
கார் விபத்து

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதில், காரில் பயணித்த 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள நல்லாம்பள்ளி பகுதியில் சாலை பராமரிப்புப் பணிகளுக்காகத் தண்ணீர் லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது உடுமலைப்பேட்டையில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இந்தக் கொடூர விபத்தின் தாக்கத்தால் கார் முற்றிலும் நொறுங்கியது. காரில் பயணித்த 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.