கார் தாக்குதல் விவகாரம்.. 35 பேரைக் கொன்ற 62 வயது நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சீனாவில் கார் தாக்குதலில் 35 பேரைக் கொன்ற 62 வயது நபருக்கு இன்று (ஜனவரி 20) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 2024 இல், சீனாவின் ஜுஹாய் மாகாணத்தில் ஃபேன் வெய்குய் (வயது 62) என்ற நபர், தனது மனைவியுடனான விவாகரத்தைத் தொடர்ந்து தனது சொத்துக்கள் பிரிக்கப்பட்டதால் விரக்தியடைந்து, அங்குள்ள விளையாட்டு மைதானத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது தனது காரில் மோதினார்.
இந்தத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து இந்தப் படுகொலையைச் செய்ததற்காக, டிசம்பர் 2024 இல் ஜுஹாய் மக்கள் நீதிமன்றத்தால் அவர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், தீர்ப்பு அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில், இன்று (ஜனவரி 20) சீன அதிகாரிகளால் ஃபேன் வெய்குய் தூக்கிலிடப்பட்டார். சீனாவில் பொதுமக்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது, 2024 இல் மட்டும் இதுபோன்ற 19 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க