போலீசாரை கார் பேனட்டில் இழுத்துச் சென்ற நபர்... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
uttar pradesh

 உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ராவத்பூர் பகுதியில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அபராதம் விதிப்பதற்காகப் போலீஸ்காரர் ஒருவர் நிறுத்த முயன்றார். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

இதனால் நிலைதடுமாறிய அந்தப் போலீஸ்காரர், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடும் காரின் முன்பக்க போனட்டைப் பிடித்தபடி தொங்கினார். இருப்பினும் டிரைவர் காரை நிறுத்தாமல் அவரை சிறிது தூரம் வரை இழுத்துச் சென்றார்.

இச்சம்பவம் தொடர்பாகக் காரின் பதிவு எண்ணை வைத்து வாகனத்தை அடையாளம் கண்ட போலீசார், டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகப் பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்துள்ளனர்.