நடந்து சென்றவர்கள் மீது அசுர வேகத்தில் மோதிய கார்... ஒருவர் பலி; 2 பேர் கவலைக்கிடம்!

 
விபத்து

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நகரேகல் அருகே, சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி தள்ளியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கோர விபத்தின் நெஞ்சை நடுங்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

நல்கொண்டாவில் இருந்து வாரங்கல் நோக்கி வேகமாகச் சென்ற கார் ஒன்று, தாட்டிகல் சாலைப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த மூன்று பேர் மீது பயங்கரமாக மோதியது. இதில் மிர்யாலகுடா மண்டலம் யாதகார்பல்லி கிராமத்தைச் சேர்ந்த பந்து வெங்கன்னா (35) என்பவர் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

அவருடன் சென்ற நண்பர்கள் இருவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கார் தாக்கியதில் பாதசாரிகள் காற்றில் தூக்கி வீசப்படும் கொடூரக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகிச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

இச்சம்பவம் குறித்து நகரேகல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரைக் கைது செய்து, மதுபோதையில் வாகனம் இயக்கப்பட்டதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.