மின்கம்பத்தில் கார் மோதி பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம்!

 
காந்த் விபத்து

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள காந்த் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மின்கம்பத்தில் கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.விபத்து குறித்து மொராதாபாத் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சந்தீப் குமார் மீனா கூறியதாவது, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வந்த வாகனம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள காந்த் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.

இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர். அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொலை

மேலும், டிரைவர் மயங்கி விழுந்ததால் கார் மின்கம்பத்தில் மோதியது விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் 4 பேர் இறந்ததால் டிரைவர் அதிர்ச்சியில் இருந்ததாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மீனா கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web