ரக்பி ரசிகர்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார் - 10 பேர் படுகாயம்; ஆஸ்திரேலியாவில் பயங்கரம்!
ஆஸ்திரேலியாவின் நியூகேஸில் நகரில் ரக்பி போட்டிக்காகக் கூடி நின்ற ரசிகர்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று அதிவேகமாகப் புகுந்து மோதியதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
'நியூகேஸில் நைட்ஸ்' ரக்பி அணியின் வீரர்களுக்கு வழியனுப்பு விழா கூறி வாழ்த்துவதற்காகப் பெருந்திரளான ரசிகர்கள் சாலையில் திரண்டிருந்தபோது இந்த எதிர்பாராத கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். அதில் 5 வயதுச் சிறுமி மற்றும் 67 வயது முதியவர் உட்பட சிலர் கடுமையான காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காரை இயக்கிய 18 வயது இளைஞரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தொடர் விசாரணை நடத்தி வரும் ஆஸ்திரேலிய காவல்துறையினர், இந்த விபத்தின் பின்னணியில் எவ்வித பயங்கரவாதத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
