பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து... சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி!

 
விபத்து

இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்லா மாவட்டம் தரோட்டி பகுதியில் குஷல் என்பவர் தனது தாயார் கல்பனா தேவி மற்றும் தொழிலாளர்களுடன் பண்ணை வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் பயணம் செய்த வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

இந்த விபத்தில் குஷல், அவரது தாயார் கல்பனா தேவி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த நிர்மலா, மீனா, ரோஷ்னி ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து

இந்த விபத்து குறித்து இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பண்ணை வேலைக்குச் சென்றவர்கள் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.