கார் டயர் வெடித்து கோர விபத்து; கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு!
Aug 29, 2026, 08:35 IST
புதுச்சேரிக்குச் சென்று விட்டு ஊர் திரும்பிய தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில், பரிதாபமாக 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மதுராந்தகம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அவர்கள் பயணித்த காரின் டயர் திடீரென வெடித்தது.

டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு கல்லூரி மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
