இதய நோயிலிருந்து தடுக்கும் அமிர்தம் காராமணி!!

காராமணியை தென் மாவட்டங்களில் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்றும் கூறுகிறோம். தட்டைப்பயறை ஊறவைத்து அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து செய்யப்படும் பயற்றுக் குழம்பு நமது பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று . வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் ‘அமிர்தம்’ காராமணி என்று அழைக்கப்படுகிறது.
காராமணியில் நார்ச்சத்து மிக மிக அதிகம். இதனால் செரிமானத் தன்மையை மேம்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகளையும் நீக்குகிறது. இதில் நிறைந்துள்ள விட்டமின்கள் இதயத்தின் மேம்படுத்தி இதய செயலிழப்பை தடைசெய்கிறது. மேலும் உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடைசெய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படா வண்ணம் உதவுகிறது.
காராமணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிஜென்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. தூக்கக் குறைபாடு உள்ளவர்கள் தூக்கச் செல்வதிற்கு சிறிது நேரத்திற்கு முன்பு காராமணியை சாப்பிட ஆழ்ந்த தூக்கம் பெறலாம். இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் அனிமிக்காக இருப்பவர்களுக்கு காராமணி அருமருந்து இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சிவப்பணுக்களின் அதிகரித்து ஆக்ஸினை உடைய ரத்தம் உடல் உறுப்புகளுக்கு பாய்ந்து உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கச் செய்கின்றன. இதில் காணப்படும் புரதச்சத்தானது பழுதான செல்களை சரிசெய்வதோடு புதிய திசுக்கள் வளரவும் உதவுகிறது. மேலும் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து சரும இளமையைப் பாதுகாக்கலாம். சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணும்போது இன்சுலின் சுரப்பினை சீராக்குகிறது. மேலும் இது உடல்சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.