விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்து 5 பேர் பலி... பரபரப்பு வீடியோ!

 
flight

 

அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகிய அமேசான் சரக்கு விமானம் எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சான் ஜூவான் பகுதியிலிருந்து வந்த இந்த சரக்கு விமானம் மியாமி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானது.

இந்தப் பயங்கர விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் படையினரும் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகளும் பாதுகாப்புப் பிரிவினரும் தீவிரமான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் விமான போக்குவரத்தில் தற்காலிகத் தடையம் ஏற்பட்டது.