6 இந்திய மாலுமிகளுடன் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் மீட்பு!
துருக்கியில் இருந்து ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கமரூன் நாட்டுச் சரக்குக் கப்பலை இந்தியப் பெருங்கடலில் வைத்து வழிமறித்துக் கடத்திய சோமாலியக் கடற்கொள்ளையர்களிடமிருந்து, சர்வதேசக் கடற்படையினர் அதிரடித் தாக்குதல் நடத்திட்டுக் கப்பலை மீட்டுள்ளனர்.
துருக்கியிலிருந்து ஆயுதங்களுடன் புறப்பட்ட கமரூன் நாட்டின் சரக்குக் கப்பலை சோமாலியக் கடற்கொள்ளையர்கள் இந்தியப் பெருங்கடலில் வைத்துத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்று கடத்தினர்.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் சோமாலிய மற்றும் துருக்கியக் கடற்படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பண்ட்லெண்ட் மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
பாதுகாப்புப் படையினருக்கும் கடற்கொள்ளையர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் 14 கடற்கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இக்கடற்படை நடவடிக்கையின் முடிவில், கப்பலில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 6 இந்தியர்கள் உள்பட மொத்தம் 10 மாலுமிகபடியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
