புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

 
தலைமை செயலகம் நீதிமன்றம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கு, மனுதாரரே அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்துத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

பட்டினப்பாக்கம்

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தாமாக முன்வந்து தனது மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.