இன்போசிஸ் இணை நிறுவனர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு !

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் இருந்து வருகிறது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்ப்பவர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன். இவர் மீது எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சதாஷிவ நகர் காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட்டி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் மற்றும் ஐஐஎஸ்சி இயக்குனர் பல்ரம் உட்பட 16 பேருக்கு எதிராக எஸ்சி/எஸ்டி வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியின இனமான போவி சமூகத்தில் ஐஐஎஸ்சியில் பேராசிரியராக இருந்தார். கடந்த 2014 ல் வழக்கு ஒன்றில் தவறாக சிக்க வைக்கப்பட்டதாகவும் அதன்பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் புகார் அளித்து இருந்தார். தன்னை சாதிய ரீதியாக திட்டியும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தான், கோவிந்த ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஷ்வஸ்ரையா, ஹரி கேவிஎஸ் தாசப்பா, பல்ராம், பி ஹமலதா மிஷி, சோட்டபடையா கே, பிரதீப் டி சவகர், மனோகரன் ஆகியோர் மீதும் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குப் பதிவு குறித்து ஐஐஎஸ்சி தரப்பிலோ, இன்போஸிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் தரப்பிலோ எந்த ஒரு கருத்தும் உடனடியாக தெரிவிக்கவில்லை. இன்போசிஸ் இணை நிறுவனராக கோபாலகிருஷ்ணன், இன்போசிஸ் நிறுவனத்தின் துணை தலைவராக 2011- 2014ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.அதே போல, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் மேலாண்மை இயக்குனராகவும் 2007 - 2011ம் ஆண்டு வரை இருந்தார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!