தொழிலாளர்களின் ஏடிஎம் கார்டுகளை மாற்றி பணம் கொள்ளை.. பலே திருடன் அதிரடியாக கைது!

 
நஜீப்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏடிஎம்மிற்கு வரும் வயதானவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ரகசிய எண்ணை பெற்றுக் கொண்டு வேறு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு பின்பு ரகசிய எண்ணை பயன்படுத்தி ஆயிரக்கணக் கான பணத்தை திருடிவந்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில்,
 வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி சந்தேகத்தின் பெயரில் சுற்றி திரிந்த நபரை இந்தக் குழு கடந்த நான்கு நாட்களாக கண்காணித்து வந்தது.

வால்பாறை நடுமலை ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் சந்தேகத்திற்குரிய நிலையில் நின்றிருந்த கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த நஜீப் வயது 36  சேர்ந்தவரை விசாரித்தனர். அப்போது ஏடிஎம் கார்டை ஏமாற்றி பெற்று பணத்தைத் திருடியதை ஒப்புக் கொண்டதன் பேரில்  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. மேற்கொண்ட விசாரணையில்  அவரிடம் இருந்து 44 ஏடிஎம் கார்டு ரூ. 5290  ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில்  கையாடல் செய்யப்பட்ட பணத்தை ஆன்லைன் ரம்மியில் சூதாடி பணத்தை இழந்துள்ளார். இவர் மீது கேரளா மாநிலத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பொள்ளாச்சியில் உள்ள சிறைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வால்பாறை காவல்துணை கண்காணிப்பாளர் கூறுகையில் இது போன்ற நபர்களிடம் பொதுமக்கள் ஏடிஎம் கார்டுகளை கொடுத்து பணம் எடுத்து தருவதாக கூறி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web