கோடை மாதங்களில் கால்நடைகளும் வெப்பத் தாக்குதலுக்கு ஆளாகின்றன! கால்நடைத் துறை அதிகாரிகள் தகவல்!

 
கால்நடை

இது குறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடைக்காலத்தில் மனிதர்களைப் போலவே கால்நடைகளும் வெப்பத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பருவமழையில் தமிழகம் விதிவிலக்கான மழைப்பொழிவு மற்றும் வெள்ளத்தை சந்தித்தது போலவே, தற்போது கோடை காலத்திலும் விதிவிலக்கான வெப்பத்தை சந்தித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் வெப்பத்தின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெயில்


தற்போது, வறண்ட வானிலையே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக காலை 8 மணிக்கு வெயில் கடுமையாக இருக்கும். அது போலவே அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே சூரியனின் உஷ்ணம் உக்கிரமடைய ஆரம்பித்துவிட்டது. நாடு முழுவதும் உள்ள பல நகரங்கள் ஒவ்வொரு நாளும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையை பதிவு செய்கின்றன. வெப்பநிலை உயரும் போது வெப்ப அலைகள் அவ்வப்போது ஏற்படும். மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், மழைக் காலத்துடன் ஒப்பிடும்போது வெப்பமான கோடையில் மாடுகள் அதிக தாக்கத்தை அனுபவிக்கின்றன. எனவே, அவற்றின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத் தாக்கம் மனிதர்களைப் போலவே கால்நடைகளையும் பாதிக்கிறது. கால்நடைகள் வளர்ந்து உற்பத்தி செய்யும் போது அதிக உடல் வெப்பநிலையை அனுபவிக்கின்றன.

From around the web