295 உயிர்கள் பலியான ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம்? அமைச்சர் விளக்கம்!!

 
ஒடிசா

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாகா நகர் ரயில் நிலையத்தில்   ஜூன் 2ம் தேதி கோரமண்டல் மற்றும் சாலிமர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் என  3 ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்தியாவையே உலுக்கிய இந்த விபத்தில்  295க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 1,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்திற்கு, ‘சிக்னலிங்-சர்க்யூட்-மாற்றம்’ நிகழ்வின் போது, தவறான சிக்னல்கள் அளிக்கப்பட்டதே காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அஸ்வினி வைஷ்ணவ்

295 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான பாலசோர் ரயில் விபத்து குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தனது விசாரணையை முடித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் சஞ்சய் ஜா மற்றும் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஒடிசா
இதற்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கூம்டி நிலையத்தில் வடக்கு சிக்னலில் உள்ள சிக்னலிங் சர்க்யூட் மற்றும் மின்சார தூக்கும் தடையை மாற்றுவதற்கான சிக்னலிங் பணியின் போது ஏற்பட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டியதாக கூறியுள்ளார்.
இந்த பிழைகள் தவறான கிரீன் சிக் சமிக்ஞை காட்டப்படுவதற்கு வழிவகுத்ததோடு அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் ரயில் மோதியது என தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்த 41 பயணிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web