காவிரி நீர் விவகாரம்... கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்!

 
காவிரி மேகதாது

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை மதித்துத் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறக்க மறுத்து வரும் கர்நாடக அரசைக் கண்டித்து, முதலமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அட்டவணைப்படி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை வந்து சேரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இந்த அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேகதாது

கர்நாடகாவில் உள்ள காவிரி பாசன அணைகளில் தற்போது 77.537 டி.எம்.சி அளவிற்குப் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது என்பது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் உள்ள நீரின் அளவைக் கணக்கிட்டு, விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்குத் தர வேண்டிய 26.954 டி.எம்.சி காவிரி நீரை உடனடியாகத் திறந்து விட உத்தரவிட வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

குறுவைச் சாகுபடி மற்றும் டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் காக்கத் தமிழக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி சட்ட நடவடிக்கை, காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நிலவும் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.