ஜூலை 22ம் தேதி தலைநகரில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்... 4 மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு!

 
காவிரி

காவிரி நதிநீரைக் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் எவ்விதப் பிரச்சினையும் இன்றிப் பகிர்ந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 2018-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. நதிநீர் விவகாரத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இந்த அமைப்பு அவ்வப்போது கூடி விவாதித்து வருகிறது. இந்த வரிசையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53-வது முக்கியக் ஆலோசனைக் கூட்டம் வரும் 22-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Karnataka to appeal against CWRC order on Cauvery water release; hold all-party meeting on July 14 - The Hindu

ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நடைபெறும் இந்த மாபெரும் கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களின் உயர் அதிகாரிகளுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 22-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் நேரிடையாகவோ அல்லது இணையவழிக் காணொலி மூலமாகவோ கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த முக்கியக் கூட்டத்தில் தென்மாநிலங்களின் விவசாயப் பாசனத் தேவைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

Demand To Put Off Cauvery Meet

குறிப்பாகத் தமிழகத்திற்கு உரியக் காலகட்டங்களில் வழங்கப்பட வேண்டிய நதிநீர்ப் பங்கீடு மற்றும் தற்போதைய அணைகளின் நீர் இருப்பு நிலவரங்கள் குறித்து இந்த அமர்வில் விரிவாக ஆராயப்படவுள்ளது. இதுவரை 52 முறை வெற்றிகரமாகக் கூட்டப்பட்டுள்ள இந்த ஆணையம், தற்போதைய பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த 53-வது கூட்டத்தைக் கூட்டியுள்ளது.