சிபிஎஸ்இ எச்சரிக்கை... 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்த வதந்திகளை நம்பாதீங்க

 
சிபிஎஸ்இ

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ வழியில் கல்வி பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான  ஆண்டுத் தேர்வுகள் பிப்ரவரி 15  முதல் ஏப்ரல் 02, 2024 வரை நடைபெற உள்ளன.  இந்த பொதுத் தேர்வுகளை சுமூகமாகவும் நியாயமாகவும் நடைபெற சிபிஎஸ் இ வாரியம் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.  தேர்வு நேரத்தில் தேவையற்ற வதந்திகள்  யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், டெலிகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில்  தளங்களில் தாள் கசிவு பற்றிய  தகவல்களை பரப்பி விடுவது இவை அனைத்தும்  கடந்த காலங்களில் நடைபெற்றது. அந்த மாதிரி தாள்களில் இருந்து கேள்விகள் இருக்கும் எனவும்,  மாதிரி தாள்களின் போலி இணைப்புகளையும் தவறான நபர்கள் பரப்பி வருகின்றனர்.

சிபிஎஸ்இ
மேலும்  வினாத்தாள்களின் போலியான படங்கள் மற்றும் வீடியோக்களும்   பரப்பி விடப்படுகின்றன.  இந்த வகையான நபர்கள், குழு மற்றும் ஏஜென்சிகள் ஏமாற்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பணத்தைக் கோருவதால் அவர்களை ஏமாற்ற விரும்புகின்றனர்.  இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.  
போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளைப் பரப்புபவர்கள் உறுதி செய்யப்பட்டால் இவர்கள் மீது தேர்வு வாரியம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன்  ஐபிசி மற்றும் ஐடி சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் சமூக ஊடக தளங்களில் போலி செய்திகளைப் பரப்புவதில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சட்ட அமலாக்க முகமைகளின் உதவியுடன் நிலைமையை சிபிஎஸ்இ உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

சிபிஎஸ்இ


 மாணவர்களே  இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.  வரவிருக்கும் வாரியத் தேர்வுகளை சுமூகமாக நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம் என   பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கூட இருந்து வழிகாட்டும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.  தேர்வின் போது இதுபோன்ற சரிபார்க்கப்படாத செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.  அத்துடன்  பொய்யான செய்திகள் பரப்புபவர்கள்  குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக info.cbseexam@cbseshiksha.in என்ற அதிகாரப்பூர்வ  CBSEக்கு மின்னஞ்சலில்  தெரிவிக்கவும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web