சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு 2-வது கட்ட பொதுத்தேர்வு மே 15-ல் தொடக்கம் - முழு அட்டவணை வெளியீடு!

 
தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2026-ம் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ள 'ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள்' திட்டத்தின் கீழ், 10-ம் வகுப்புக்கான இரண்டாவது கட்ட பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது.

முதலாவது தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இரண்டாவது தேர்வு மதிப்பெண்ணை உயர்த்த விரும்பும் மாணவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப்படுகிறது (விருப்பம் உள்ளவர்கள் மட்டும்). ஒரு மாணவர் அதிகபட்சம் 3 பாடங்கள் வரை எழுதலாம். முதல் தேர்விற்கும், இரண்டாம் தேர்விற்கும் இடையே எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதுவே இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படும்.

மாணவிகள் படிப்பு விடுமுறை தேர்வு சிபிஎஸ்இ

தேதி

பாடம் (Subject)

மே 15

கணிதம் (Mathematics Standard & Basic)

மே 16

ஆங்கிலம் (English Language & Literature)

மே 18

அறிவியல் (Science)

மே 19

மொழிகள், இல்ல அறிவியல், இசை, சில்லறை வர்த்தகம், சுற்றுலா

மே 20

ஓவியம், சமஸ்கிருதம், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு

மே 21

சமூக அறிவியல் (Social Science)

சிபிஎஸ்இ மாணவிகள் தேர்வு முடிவுகள் ரிசல்ட்

மே 15-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை குறுகிய கால இடைவெளியில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படுகின்றன. மாணவர்கள் ஒரே ஆண்டில் தங்கள் மதிப்பெண்ணைச் சீரமைத்துக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது.