பகீர் சிசிடிவி காட்சிகள்... சாப்பிட்டதும் உணவகத்தில் பணம் செலுத்திய போது இளைஞர் மயங்கி சரிந்து பலி!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. இதில் நடுத்தர வயதுடையவர்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் சில நேரங்களில் குழந்தைகளும் கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர்.
‼️💉💉Silent genocide continues in India!!
— Rohit Mishra (@RohitMishra2024) March 5, 2025
एक युवक खाना खाने के बाद होटल का बिल चुकाने काउन्टर पर जाता है और फिर बिल देखता है तभी अचानक हार्ट अटैक आकर 27 साल के युवक की मौत हो जाती है😢 आखिर क्या कारण हैं कि लोगों की अचानक मौत हो रही है?गंभीर सवाल हैं 🙏https://t.co/XlnfjhTtHV pic.twitter.com/8VGmk87FnW
அந்த வகையில், சமீபத்தில் ராஜஸ்தானில் இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தில் நகராட்சி மன்ற துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்தவர், சச்சின் கரு (27). இவர் மார்ச் 1ம் தேதி அதே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரை நோக்கிச் சென்றார். ஹோட்டல் ஊழியர், அவரிடம் பில்லைக் கொடுத்தார். பில்லைப் பார்த்ததும், சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த நேரத்தில் அவர் திடீரென கவுண்டரில் சரிந்து விழுந்தார்.
இந்தக் காட்சியைக் கண்டதும், உணவகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியர்களும் மக்களும் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.