அனைத்து பள்ளி வாகனங்களில் சிசிடிவி....தமிழக அரசு திடீர் உத்தரவு!

 
சிசிடிவி

 தமிழக அரசு தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை  வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜி.பி.எஸ். மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

சிசிடிவி

பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட வேண்டும்.
ஓட்டுநர்களுக்குத் தினமும் சுவாச சோதனை செய்தபின் தான் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும்.
பள்ளி வாகனங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஏப்ரல் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (தனியார்ப் பள்ளிகள்) உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் மாணவியர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக வரும் புகாரின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web