பகீர் சிசிடிவி.. அவசர அவசரமாக சாலையை கடக்க முயன்ற சிறுவன்.. அதிவேகத்தில் மோதிய பைக்!

 
மஞ்சேஷ்வர் விபத்து

கர்நாடகாவில் நடந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு சிறுவன் சாலையின் இருபுறமும் பார்க்காமல் சாலையைக் கடக்கிறான். அப்போது அவ்வழியாக வந்த பைக் ஒன்று சிறுவன் மீது மோதியது. இந்த சம்பவம் மங்களூருவில் உள்ள மஞ்சேஷ்வர் என்ற பகுதியில் நடந்துள்ளது. அதாவது, குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியே வந்தவுடன் ஒரு சிறுவன் சாலையைக் கவனிக்காமல் கடந்து செல்கிறான்.


அப்போது அந்த வழியாக வந்த பைக் ஒன்று சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!