பகீர் சிசிடிவி.. கணவன் கண் முன்னே துடி துடித்து பலியான மனைவி.. லாரி ஓட்டுநர் அதிரடியாக கைது!

 
 சசிகலா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 51). இவரது மனைவி சசிகலாவுக்கு வயது 44. இருவரும் தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டு விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஒரு சிக்னலில் அவர்கள் காத்திருந்தபோது, ​​சென்னையில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த ஒரு கண்டெய்னர் லாரி, சிக்னலில் காத்திருந்த கார் மீதும், சம்பத்-சசிகலா தம்பதியினரின் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.


அவர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தபோது, ​​சசிகலா லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். அப்போது, ​​கட்டுப்பாட்டை இழந்த லாரி சசிகலா மீது மோதியதில், அவரது கணவர் கண் முன்னே அவரது தலை நசுங்கியது. பின்னர், விபத்து குறித்து தகவல் கிடைத்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சசிகலாவின் உடலை ஆம்புலன்சில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் கருப்பசாமியை (வயது 20) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தின் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!