லெபனான் மீதான போர் நிறுத்தம்.. படைகளை திரும்பப் பெற்றது இஸ்ரேல்!

 
இஸ்ரேல்

இஸ்ரேல் கடந்த ஆண்டு காசா மீது போர் தொடுத்தது, கிட்டத்தட்ட ஒரு வருடமாக போர் நடந்து வருகிறது. பின்னர் அது லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லாஹ் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது, லெபனானில் நடந்த இந்த போரில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல்

மேலும், பேஜர் தாக்குதல்களும் நடந்துள்ளன. இந்நிலையில் தற்போது லெபனானில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, இஸ்ரேல் தற்போது போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், இந்திய நேரப்படி இன்று காலை 7:30 மணி முதல் போர் நிறுத்தம் தொடங்கும் என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார். மேலும் படைகளை திரும்பப் பெற்றுள்ளது இஸ்ரேல்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web