திருமணத்தில் நிறைவேறிய காதல்... நடிகர் வெற்றி வசந்த் - வைஷ்ணவி திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்!

 
vasanth
 

குறுகிய காலத்தில் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சீரியல் நடிகர் வெற்றி வசந்த் - வைஷ்ணவி திருமணம் இன்று காலை நடந்தேறியது. சின்னத்திரை நடிகர், நடிகைகளும், திரையுலக பிரபலங்களும் திருமணத்திற்கு வந்திருந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள். 

முத்து கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் வெற்றி வசந்த். இதனால் வெற்றி வசந்த்திற்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். பெண்கள் மத்தியிலும் இவரது சீரியலுக்கும், கதாபாத்திரத்திற்கும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. 

அதே போன்று விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்த வைஷ்ணவி, தற்போது ‘பொன்னி’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த மாதம் தான் நடிகர் வெற்றி வசந்த்தைக் காதலித்து வரும் தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார் நடிகை வைஷ்ணவி. 

vasanth

காதலை இருவரும் வெளிப்படையாக அறிவித்த ஒரே வாரத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நவம்பர் 28ம் தேதி காலை இந்த சின்னத்திரை ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் சின்னத்திரை நடிகர், நடிகைகளும், திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு காதல் ஜோடியை வாழ்த்தினார்கள். சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியான நிலையில் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைப் புதுமண தம்பதியருக்கு தெரிவித்து வருகின்றனர்.

From around the web