புது நட்சத்திர ஜோடிகளுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து!

 
சித்தார்த் மற்றும் அதிதி ராவ்

சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, அது குறித்து விளக்கமளித்துள்ள நடிகர்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஜோடிக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இருவரும் கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் சித்தார்த், திருமணம் ஆகவில்லை என்றும், கோயிலில் நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்ததாகவும் அறிவித்துள்ளார். 

சித்தார்த் மற்றும் அதிதி ராவ்

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவருமே தங்களது மகிழ்ச்சியான தருணங்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் பகிர்ந்து தங்களது காதலையும் உறுதி செய்தனர். ’எப்போது திருமணம்?’ என ரசிகர்களின் கேள்விக்கு இருவருமே பல சமயங்களில் மழுப்பலாக நழுவி சென்று, தங்கள் காதல் பற்றிய செய்திக்கு மறுப்பு சொல்லாமல் இருந்து வந்த நிலையில், தெலுங்கானாவில்  நடிகை அதிதி ராவ் குடும்பத்தினருக்கு சொந்தமான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

சித்தார்த் மற்றும் அதிதி ராவ்

திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web