ஆண்மையை பாதிக்கும் செல்போன் பயன்பாடு.. ஆய்வில் அதிர்ச்சி..!!
செல்போன் பயன்பாட்டால் விந்தணு பாதிப்படைவதாக எழுந்த விமர்சனத்திற்கு யுனிவர்சிட்டி ஆப் மான்சிஸ்டர் நிறுவன ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
செல்போன் பயன்பாட்டால் கடந்த 50 ஆண்டுகளில் உலகளாவிய அளவில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்திருப்பதாக வெளியான தகவல் ஆண்கள் வெளியான தகவல் ஆண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யுனிவர்சிட்டி ஆப் ஜெனிவா நடத்திய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. அந்த ஆய்வில், 18 முதல் 22 வயதிற்குட்பட்ட ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், ஒரு நாளைக்கு 20 முறைக்கு முறைக்கு மேல் செல்போன் பயன்படுத்தியதில் , ஒட்டுமொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு 21 சதவீதம் இருந்தது தெரியவந்துள்ளது.
அதே நேரம், பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்திருப்பதற்கும் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே போல், நவீன 4G, 5G ஸ்மார்ட் போன்களை விட பழைய 2G, 3G பட்டன் போன்களே ஆண்களை அதிகம் பதம்பார்ப்பதாக மற்றொரு சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்டுள்ளது யுனிவர்சிட்டி ஆப் மான்சிஸ்டர் நிறுவன ஆய்வு. ஆனால் இதை எப்படி என்று விவரிக்க முடியவில்லை என்றும் தொடர்ந்து இது குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் குறுஞ்செய்தி அனுப்பும் போதும், பெரிய கோப்புகளைப் பதிவிறக்கும் போதும், ஆடியோ மற்றும் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் போதும் radio frequency electromagnetic field கதிரியக்கம் குறைவதும்... அதுவே ஓடும் பேருந்தில், காரில் மொபைல் பயன்படுத்தும் போது, இந்த கதிரியக்கம் அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்கள் தங்களின் இடுப்பு பகுதியை அதிகம் வெப்பமடையாமல் பார்த்து கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்துகிறது யுனிவர்சிட்டி ஆப் ஜெனிவா. செல்போன் பயன்பாட்டிற்கும், ஆண்மை குறைவிற்கும் இடையேயான தொடர்பு குறித்து விவாதிக்கப்பட்டு வந்தாலும், அவ்வப்போது முன்வைக்கப் படும் சில மாறுபட்ட கருத்துக்களால் நீடிக்கும் சர்ச்சை தொடரவே செய்கிறது.