செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை... பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
ஆபாசம் பாலியல் சிசிடிவி செல்போன் பாலியல் மிரட்டல் ஆபாசம் பாலியல் சிசிடிவி செல்போன் பாலியல் மிரட்டல்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு மணக்காட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்த தியானேஸ்வரன் மற்றும் ஹேமலதா தம்பதியரின் மூத்த மகளான சுபஸ்ரீ என்ற 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் மாணவி சுபஸ்ரீ வீட்டில் இருந்தபொழுது நீண்ட நேரமாகத் தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதனைத் கவனித்த அவரது தந்தை தியானேஸ்வரன், அடிக்கடி செல்போனைப் பார்த்துக் கொண்டே இருக்கக் கூடாது என்று மகளைக் கண்டித்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆம்புலன்ஸ்

பின்னர் மதியம் வீட்டிற்குத் திரும்பிய தியானேஸ்வரன், தனது இளைய மகளிடம் சுபஸ்ரீ குறித்துக் கேட்டுள்ளார். அவர் படுக்கை அறையில் இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து தியானேஸ்வரன் படுக்கை அறையின் கதவைத் தட்டிப் பார்த்துள்ளார். கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததாலும், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததாலும் பெரும் சந்தேகமடைந்த தியானேஸ்வரன் உடனடியாகக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்பொழுது அறையினுள் மாணவி சுபஸ்ரீ தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துத் தந்தை கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகளை மீட்டுச் சிகிச்சைக்காகக் கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மலையம்பாளையம் காவல் நிலைய போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.