பள்ளி வேலை நேரம் தவிர்த்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி... ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!
தமிழகத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி வரும் 31-ந்தேதி வரை இந்த முக்கியப் பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளதால் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்புப் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு, வீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

இந்த சூழலில் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுக்கான புதிய சுற்றறிக்கைகளை அனுப்பி உள்ளனர். அதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை நேரங்களில் வீடு, வீடாகச் சென்று பணியாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்தத் கணக்கெடுப்புப் பணிகளால் பள்ளி வகுப்புகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது எனவும் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி வேலை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் மட்டுமே இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் அனைவரும் இந்த அரசுப் பணிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதோடு மாணவர்களின் கல்வியும் பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விடுத்துள்ள இந்த உத்தரவு தற்போது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
