தமிழகத்திடம் 40 மருத்துவ இடங்கள் ஒப்படைக்கப்படும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

 
,மருத்துவ நீட் எம்பிபிஎஸ் மருத்துவர்

தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை மாநில அரசிடமே திரும்ப ஒப்படைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

மருத்துவர்கள் மருத்துவர் டாக்டர்

தமிழகத்தில் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்குவதற்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: இளம் மருத்துவர்களின் எதிர்காலத்தை பொருந்தா நிபந்தனைகள் பாதிக்க கூடாது! – டாக்டர் ராமதாஸ் 

இந்த வழக்கு விசாரணையின்போது, கலந்தாய்வில் நிரப்பப்படாமல் எஞ்சியிருக்கும் 40 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை மீண்டும் தமிழக அரசிடமே ஒப்படைப்பதாக மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.