செய்தியாளர்களிடம் சதிராடிய சக்ரபாணி ஆதரவாளர்கள்!!

 
கோவில்

உலகப்புகழ்பெற்ற   திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சக்கரபாணி  சத்ருசம்ஹார பூஜை செய்துவிட்டு  செய்தியாளர்கள் படம் பிடிக்காதவாறு கோவில் பேட்டரி வாகனத்தில் தனியார் விடுதிக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் இரண்டாம் அடை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சிறந்த பரிவாரத்தலமாக விளங்குகிறது. இந்தநிலையில் இன்று  ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  சத்ருசம்ஹார கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். 
கோவிலில் மூலவர் , சண்முகர், வள்ளி தெய்வானை அம்பாள்,  பெருமாள், விநாயகர் , மற்றும் தட்சணா மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும்  சிறப்பு வழிபாடு செய்த அவர் 
 மூர்த்திக்கு  எதிரிகளை வெல்லக்கூடிய திரிசதி பூஜை நடத்தி வழிபாடு நடத்தினார். ஆடிப்பெருக்கு தினத்தில்  பரிகார ஸ்தலத்தில் பரிகார பூஜைகள் செய்து  வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும்  என்பது நம்பிக்கை.

கோவில்

மேலும்  திமுக அமைச்சர்கள் மீது  தொடச்சியாக  அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சத்ருசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

கோவில்

இந்தநிலையில் நேற்று அமைச்சர் சக்கரபாணி கோவிலில்  இரகசியமாக சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவதாக தகவறிந்து படம் பிடிக்கச்சென்ற செய்தியாளர்களை தவிர்த்து மாற்றுப்பாதையில் வெளியேறிய அமைச்சர் சக்கரநாணி கோவில் பேட்டரி வாகனத்திலேயே விதிமுறைகளை மீறி  தனியார் விடுதிக்கு சென்று அங்கிருந்த காரில் ஏறி அவசரமாக புறப்பட்டுச்சென்றார். அப்போது படம் பிடித்த செய்தியாளர்களை அமைச்சருடன் வந்தவர்கள் தடுத்து படம் பிடிக்காதவாறு பார்த்துக்கொண்டனர். ஆடிப்பெருக்கு தினத்தில்  அமைச்சர் சக்கரபாணி சத்ருசம்ஹார மூர்த்திக்கு எதிரிகளை வெல்லக்கூடிய சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்திய  சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில் கோயில் உண்டியலில் 500 ரூபாய் கட்டுகளை செலுத்தி உள்ளார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web