வா அம்மாகிட்டயே போலாம்... மாற்றுத்திறனாளி இளைஞர் மனைவியுடன் தற்கொலை!

 
aandra

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜநகரம் அடுத்த பத்துங்க பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண் ராவ் மற்றும் இவரது மனைவி சியாமளா ஆவர். மாற்றுத்திறனாளிகளான இவர்களது திருமணம் கடந்த ஆண்டு தான் சிறப்பாக நடைபெற்றதுடன் திருமணத்திற்குப் பின் திருப்பதியில் வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு லட்சுமண் ராவின் தாய் திடீரென மரணமடைந்ததால் அவர் கடும் அதிர்ச்சியடைந்து சோகத்தில் மூழ்கினார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

தாயின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அவர் தனது மனைவியிடம் அம்மா அடிக்கடி கனவில் வந்து தன்னை அழைப்பதாகக் கூறித் தினமும் புலம்பி வந்துள்ளார். அம்மா இல்லாத இந்த உலகத்தில் வாழ முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அவர் தனது மனைவியிடம் தொடர்ந்து வற்புறுத்தினார். ஆனால் இதற்குச் சியாமளா முற்றிலும் மறுப்புத் தெரிவித்ததுடன் தற்கொலை எண்ணத்தைக் கைவிடுமாறு தனது கணவருக்குத் தொடர்ந்து அறிவுரைகளைக் கூறினார்.

இவர்களது வீட்டுக்கதவு நீண்ட நேரமாகப் பூட்டிக் கிடந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்து உதவி கோரினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று கணவன் மனைவி இருவரும் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடல்களை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்துத் தீவிரமான வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.