முன்னாள் உலக சாம்பியன் குத்துச்சண்டை வீரர் சுட்டுக்கொலை...!
Aug 22, 2026, 20:40 IST
தென்ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான ஜொலானி டெட்டே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் 2007-2008 மற்றும் 2017 முதல் 2019 வரையிலான காலகட்டங்களில் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவார்.
ஈஸ்டர்ன் கேப் நகரில் உள்ள தனது வீட்டின் வாசலில் காரில் காத்திருந்தபோது, முகமூடி அணிந்து வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் காரில் இருந்த இளம்பெண் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மட்டைப்பந்து போட்டியில் மிக விரைவாக 11 விநாடிகளில் எதிராளியை வீழ்த்தி கின்னஸ் சாதனை படைத்தவர் டெட்டே என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்துத் தென்ஆப்பிரிக்க அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
