தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
மழை

 

தமிழகத்தில் வருகிற 24-ந்தேதி சென்னை உள்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, வருகிற 24-ந்தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.