தமிழகத்தில் டிசம்பர் 2 வரை மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
மழை விடுமுறை

தமிழகத்தில் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 27 முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

குறிப்பாக டிசம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளிலும் புதுவையிலும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வானிலை ஆய்வு மையத்தின் அவ்வப்போதைய அறிவிப்புகளைக் கவனித்து அதற்கேற்பத் தங்களது பணிகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனமழை விடுமுறை பள்ளிகள் குடை வெள்ளம் மழை

தற்போதைய நிலவரப்படி 28°C வெப்பநிலையும் லேசான மழையும் நிலவுவதோடு, இன்று அதிகபட்சமாக 29°C மற்றும் குறைந்தபட்சமாக 26°C வெப்பநிலையுடன் லேசான மழை பெய்ய 55% வாய்ப்புள்ளது.