செம... இன்று நிலவில் தரையிறங்கும் சந்திராயன் லேண்டர்!!

 
சந்திராயன் 3

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக  சந்திரயான் - 3 விண்கலத்தை   ஜூலை, 14ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பி வைத்தது. இந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து, நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்து   நிலவை சுற்றி வந்தது.விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான  சுற்றுப் பாதை தொலைவு படிப்படியாக குறைந்து வந்தது.

லேண்டர்

இதுவரை 4 முறை   இந்த தொலைவு குறைக்கப்பட்ட நிலையில்,  5வது மற்றும் கடைசி கட்ட துாரம் குறைப்பு முயற்சியும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.  இதையடுத்து, சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, 'புரபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்து கலத்தில் இருந்து, 'லேண்டர்' நிலவில் தரையிறங்க உள்ளது. அதன்பின், சந்திரயான் - 3 விண்கலம், நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யும். அதே நேரத்தில், லேண்டர் சாதனத்தை, நிலவின் தென் துருவத்தில், 23ம் தேதி தரையிறக்கும்.  இந்த லேண்டர் சாதனத்துக்குள், 'ரோவர்' எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வாகனம் இடம் பெற்றுள்ளது.

சந்திராயன் 3

லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய உடன், ரோவர் வாகனம், நிலவின் மேற்பகுதியில் சுற்றி வந்து ஆய்வு செய்யும். இதுவரை அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளதாக, இஸ்ரோ தெரிவித்து உள்ளது.இந்திய விண்கலம்  லேண்டர் நிலவில் கால் பதிக்கும் நேரத்தை  இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.   இந்திய விஞ்ஞானிகளின்  இந்த வெற்றியை உலகமே கண்டு வியக்கும் தருணம் விரைவில் கைகூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web