நாளையும், மறுநாளும் தாம்பரம் விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம்!

 
தாம்பரம்

 தமிழகத்தில் விழுப்புரம்  ரயில்நிலைய யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனையடுத்து திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  விழுப்புரம் ரெயில் நிலைய யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

விழுப்புரம்

இதன் காரணமாக தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரத்துக்கு புறப்படும் பயணிகள் ரயில்  நாளையும், நாளை மறுநாளும்  விக்கிரவாண்டி- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விழுப்புரம்

இதேபோல் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) விழுப்புரம்- விக்கிரவாண்டி இடையே நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.54 மணிக்கு புறப்படும் எனக்  கூறப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web