12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றம் !! அமைச்சர் அதிரடி!!

 
தேர்வு

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. மே5 ம் தேதி தேர்வு  முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இதில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  நீட் தேர்வுகள் இந்தியா முழுவதும் மே 7ம் தேதி நடைபெற உள்ளன. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
திட்டமிட்டபடி, மே 5ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானால் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படலாம். இதனால், நீட் தேர்வுக்கு பின்பு வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கு பின்பு 12 வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ரிசல்ட் முடிவுகள் தேர்வு தேர்தல்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது.  12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8.76 லட்சம் பேர் எழுதினர்.  ஏப்ரல்  10ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி  ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்றது.இதையடுத்து, தற்போது  மதிப்பெண் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, மே 7ம் தேதி நடைபெற உள்ளது.  நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, + 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ் 2வில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

நீட் நுழைவுத்  தேர்வு

இதனால் +2 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தள்ளிப்போடலாம். இதனால் மே5 ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web