சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மாநகர பேருந்து நிறுத்தங்கள் மாற்றம்!
சென்னையில் பல பகுதிகளில் மெட்ரோ ரயில்கள் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் சில இடங்களில் சிக்னல்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி இடம் மாற்ற மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக பிராட்வே – முகப்பேர் (7M), வடபழனி – தரமணி (5T) ஆகிய இரு வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டு சென்னை மாநகராட்சியிடம் இது குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்னல் மற்றும் மேம்பாலங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!